தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக முன்னாள் பிரமுகர் காயத்ரி ரகுராம் அண்ணாமலையின் செலவு கணக்குகளை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அண்ணாமலையின் தனிப்பட்ட செலவு (PA வாடகை விமான கார் செலவு) இரண்டு வருடங்களுக்கு மட்டுமே ரூ. 58,40,00,000. பிறகு இரண்டு வருடங்களுக்கு மட்டும் சுய விளம்பரம், வார் ரூம், யூடியூப் சேனல்கள், டிவி சேனல்கள், அவரது புகழ் பாட கூட்டம் ஹனிட்ராப் மற்றும் பிறரை இழிவு படுத்துவதற்கான லஞ்சம் கொடுப்பதற்கான தொகையை எவ்வளவு என்று கனவு காண முடிகிறதா.? வெறும் 4 ஆடுகளின் சொந்தக்காரரான எளிய விவசாயி மகன் எப்படி நண்பர்களுடன் எந்த ஒப்பந்தமும் இல்லாமல் ஓசியில் அனைத்தையும் பெற முடியும்.?

ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் 5 நிமிடங்களுக்கு முன் நீங்கள் ஒரு பொய் சொல்கிறீர்கள். 5 நிமிடங்களுக்கு பிறகு நீங்கள் ஒரு பொய் சொல்கிறீர்கள். எப்படி? உங்களுடைய பில்களை எல்லாம் பார்த்துக் கொள்ள நண்பர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னீர்கள். இப்போது நண்பர்கள் இல்லை என்று சொல்கிறீர்கள். உங்களுக்கு இசட் பாதுகாப்பு இருக்கிறது என்று சொன்னீர்கள். அதனால் தான் பெரிய வாடகை வீட்டிற்கு மாறிவிட்டீர்கள் என்று சொன்னீர்கள். ஆனால் இப்போது நீங்கள் பாதுகாப்பு இல்லை என்று சொல்கிறீர்கள். உங்களுடைய வாழ்க்கை கடினமானது போன்று நடித்து அனுதாபத்தை பெற முயற்சிக்கிறீர்கள். ஏதும் இல்லை தாராளம் என்று பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/Gayatri_Raguram/status/1646936686054760448?t=iuzshrqn4u9eM8yJpBlXeg&s=19