
என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் முதலில் செய்யப் போற வேலை என்னன்னா….. அறநிலைத்துறை என்ற அமைச்சரவையே நாங்கள் எடுத்து விடுவோம்… அதற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்க…. அதற்கு நம்முடைய அறநிலைத்துறை அமைச்சர் சொல்கிறார்…..
அண்ணாமலையும், பாரதிய ஜனதா கட்சியும் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கின்றார்கள், அவர்கள் எப்படி அறநிலைத்துறையை எடுப்பார்கள் என்று…. அண்ணன் சேகர்பாபு அவர்களே…. இங்க இருக்கக்கூடிய சமயபுரம் மாரியம்மன் கோவில், ஒரு பெரிய வளாகம் கட்ட வேண்டும் என்று கோவிலினுடைய வைப்பு நிதியிலிருந்து….
உண்டியலில் இருந்து இந்த அரசு எடுத்து இருக்கக்கூடிய பணம் மட்டுமே 422 கோடி ரூபாய். அதாவது இந்த தொகுதியில் இருக்கக்கூடிய…. சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து இருக்ககூடிய நம்முடைய பக்தர்கள் எல்லோருமே கஷ்டப்பட்டு…. சம்பாதிச்சு… தான் கேட்டிருக்கக் கூடிய ஏதோ ஒரு விஷயத்தை அம்மன் செய்து கொடுத்திருக்கிறார்கள் அதற்காக…..
கோவிலின் உண்டியலில் அவர்கள் போட்டிருக்கக் கூடிய பணம் காலம் காலமாக சேர்த்து வைத்து…. 422 கோடி இந்த ஒரு இடத்தில் மட்டும் பெருந்துட்டு வளாகம் கட்டப் போறோம் என சொல்கிறார்கள் என பேசினார்.