செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான், சிப்காட் போராட்டத்தில் ஈடுபட்ட அருள் மீது குண்டாஸ் வாபஸ் பெற வில்லை. 8 வழிச் சாலைக்கு  என்னோடு சேர்ந்து போராடினார். போராட்டத்தை தூண்டினார் என்பதுதான் அருள் மீது இருக்கின்ற குற்றச்சாட்டு… போராட்டத்தை தூண்டுவது அருளா ? இல்லை என்னை போன்றவர்களா ?  இல்லை மக்களுக்கு களத்தில் நிற்பவர்களா ? ஆசிரியர் போராட்டம் மறுபடியும் தொடங்கப் போகிறது…..

போராட்டத்தை தூண்டுவது அரசா ?  மக்களா ? இந்த போராட்டத்தை எங்களுக்கு கையளிப்பது… எங்கள் மேல் திணிப்பது யார் ? எங்களுக்கு பொழுது போகாமல் உட்கார்ந்து போராடிக் கொண்டிருக்கிறோமோ ? அப்படி ஒன்றும் இல்லை… போராட்டத்தை மக்களுக்கு திணிப்பது யார் ? மக்களுக்கு அந்த போராட்டங்களை கையளிப்பது யார் ? அப்போ அநீதியை எதிர்க்கவே கூடாது…

அநீதியை கண்டு அச்சம் கொள்ளாது, துணிந்து நிற்பவன் எவனோ அவனே போராளி என்று நபிகள் சொல்கிறார்… அநீதி எங்கு எங்கு நடக்கிறதோ, அதை கண்டு நீ கோபப்படுவாய் ஆனால் நீயும் என் தோழனே என்று சொல்கிறாள் சேகுவாரா… அநீதியை கண்டு…. அதை எதற்கு துணிவில்லாமல்,  சகித்துக் கொள்பவன் அடிமையாகின்றான்….  தொடர்ந்து சகித்துக் கொள்பவன் அடிமையாகிறான்… இப்போ நாங்க எதை பின்பற்ற ? அப்படியே அடிமையாகிவிட வேண்டும்.

எல்லாத்தையும் சகித்துக் கொண்டு…..   எது வந்தாலும்,  நமக்கு என்ன விடுப்பா ? விதிக்கப்பட்ட விதி அப்படின்னு  போய்விட வேண்டுமா ? எப்படி ? இழந்துவிட்ட உரிமைகளை…. பிச்சை கேட்ட பெற முடியாது… போராடி தான் பெற்றாக வேண்டும் என்று சொன்னார் அண்ணல் அம்பேத்கர். அப்போ அவர் கோட்பாட்டை ஏற்கவா ? இல்லை  இவர்கள் சொல்லுகின்ற கோட்பாட்டை ஏற்கவா ? நீ போராட பயப்படுகிறாய்… தினை விதை பூமியோடு போரடித்தன் முளைக்கிறது என்று சொல்லுகிறார் சேகுவேரா.. அப்ப நான் எதைத்தான் பின்பற்றுவது ?  போராட்டமால் எது ஒன்று பிறந்து இருக்கிறது என் தெரிவித்தார்.