பாகிஸ்தானின் நெருங்கிய கூட்டாளியாக கருதப்படும் அஜர்பைஜான் தற்போது எடுத்துள்ள ஒரு முடிவு, பாகிஸ்தானும் சீனாவும் துருக்கியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சீனாவின் ஆதிக்கத்தில் இருந்துள்ள CICA எனும் முக்கிய பாதுகாப்பு மாநாட்டை, 2026-ம் ஆண்டு இந்தியாவில் நடத்தப்படும் என்ற அஜர்பைஜானின் முடிவு, சர்வதேச அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் தங்களது விசுவாசமான கூட்டாளியாக நினைத்த நாடே இந்தியாவின் பக்கம் சாய்ந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டுக்கான CICA மாநாட்டின் தலைமை அதிகாரம் அஜர்பைஜானிடம் உள்ளது. இந்த சூழ்நிலையில், அடுத்த மாநாட்டை இந்தியாவில் நடத்தும் யோசனையை அசர்பைஜான் முழுமையாக ஆதரித்துள்ளது.
இது ஒருபக்கம் இந்தியாவுக்கு ஒரு பெரிய டிப்ளமாட்டிக் வெற்றியாக இருக்க, மறுபக்கம் சீனாவுக்கு, குறிப்பாக பாகிஸ்தானுக்கும் ஒரு நேரடி வலிக்கட்டியாக உள்ளது. கடந்த காலங்களில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் இந்தியா-விரோத நடவடிக்கைகளில் பாகிஸ்தானுக்கு துருக்கி மற்றும் அஜர்பைஜான் வெளிப்படையாக ஆதரவு தந்திருந்தது.
இந்த மாநாட்டை இந்திய வெளிநாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய உலக விவகாரங்களுக்கான கவுன்சில் (ICWA) ஒழுங்கமைக்கவுள்ளது. ஏற்கனவே இந்தியா கடந்த செப்டம்பர் மாதம் அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற CICA மாநாட்டில் பங்கேற்றது. அங்கு, ICWA-வின் பிரதிநிதியாக நூத்தன் கபூர் மகாவார் தலைமையில் ஒரு குழு இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியது.
இந்நிலையில், அடுத்த மாநாட்டை இந்தியாவில் நடத்த ஒப்புதல் வழங்கியுள்ள அஜர்பைஜான், பாகிஸ்தான் மீதான அதன் நம்பிக்கையைத் துளைத்துவிட்டது என கூறப்படுகிறது.
