பெங்களூருவில் ஆட்டோ ஓட்டும் அசாமைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பாரத மாதா மற்றும் பசு மாடு குறித்து கிண்டலாகவும், அவமரியாதையாகவும் பேசியதாகக் கூறி ஒரு கும்பல் அவரைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கியுள்ளது.
“தேசிய பாதுகாப்புப் படை” (National Defence Force) என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு குழுவினர், அந்த டிரைவரைப் பிடித்து வைத்துக்கொண்டு, அவர் பேசிய கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்கச் சொல்லி மிரட்டித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
Bengaluru: Auto Driver from Assam Detained and Assaulted Over Alleged Sarcastic Remarks About India and Cow
byu/Altruistic-Issue-887 inIndiaFreakoutDesi
தாக்குதலுக்கு உள்ளான அந்த ஆட்டோ டிரைவர், வீடியோவில் தனது செயலுக்குக் கண்ணீருடன் மன்னிப்பு கேட்பதுடன், இனிமேல் இப்படிப் பேச மாட்டேன் என்றும் கூறுகிறார்.
இந்தச் சம்பவத்தைப் பார்த்த நெட்டிசன்களில் ஒரு தரப்பினர், இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தியவருக்கு இது சரியான தண்டனை தான் என்று ஆதரவாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
ஆனால், மற்றொரு தரப்பினரோ, ஒருவர் என்னதான் தவறாகப் பேசினாலும் சட்டம் கையில் எடுப்பதும், ஒருவரை மனிதாபிமானமின்றித் தாக்குவதும் மிகப்பெரிய குற்றம் என்று எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பெங்களூரு போலீஸார் இதுவரை முறையான வழக்குப் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
