ஆதார் கார்டு வாயிலாக வங்கிக்கணக்கு இருப்பை சரிபார்ப்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். உங்களது வங்கி இருப்பை அறிய 4 எளிய வழிகள் இருக்கிறது. முதலில் உங்கள் ஆதாருடன் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து *99*99*1# என்ற நம்பரை டயல் செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டில் 12 இலக்க எண்ணை உள்ளிட்டு  தொடர வேண்டும்.

இதையடுத்து உங்கள் ஆதார் எண்ணை மீண்டுமாக  உள்ளிட்டு சரிபார்க்க வேண்டும். இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) உங்களுக்கு கணக்கு இருப்பின் பிளாஷ் sms அனுப்பும். இதன் வாயிலாக நீங்கள் எத்தனை வங்கிக்கணக்குகள் வைத்து இருந்தாலும், அதன் விபரங்களும் வெளிவரும். இதன் காரணமாக நீங்கள் வங்கிக்கோ (அல்லது) ATM-களுக்கோ செல்லவேண்டிய தேவையில்லை.