சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று இறைவழிபாடு மேற்கொள்ளக்கூடிய நாளாக இருக்கும்.

கல்யாண முயற்சி கைகூடும். சமூகப்பணி புரிவதில் ஆர்வம் கொள்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். பயணத்தில் நல்ல முடிவுகள் கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவையை சரி செய்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் உண்டாகும். வியாபாரத்தில் திட்டங்களை தீட்ட வேண்டும். பொருளாதார நெருக்கடிகள் ஏற்படக்கூடும். நிதானமாக எதையும் அணுகவேண்டும். யாரையும் நம்பி வேலையில் ஈடுபட வேண்டாம். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பெற்றோர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவையில்லாத பேச்சை தவிர்க்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெளிர் மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று விநாயகர் வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் மஞ்சள் மற்றும் இளம்பச்சை நிறம்