கன்னி ராசி அன்பர்களே…! தர்மசங்கடமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும்.
உறவினர் பணம் கேட்டு தொந்தரவு செய்யக் கூடும். நல்ல குணம் மாறாமல் செயல்படுவீர்கள். உதவி செய்யக்கூடிய எண்ணம் இருக்கும். ஆனால் தனவரவு மட்டுப்பட்டு தான் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் வேலைப்பளுவும் இருக்கும். பணவரவு அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். வளர்ப்பு பிராணிகளிடம் கொஞ்சம் விலகியே இருங்கள். தன்னம்பிக்கை கூடும். வாகனங்களால் செலவு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நெருக்கடி கொடுக்கலாம்.
கோபமில்லாமல் பேச வேண்டும். மேலதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். பயனற்ற பயணங்களை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். வீண் அலைச்சலை முற்றிலும் தவிர்க்கப் பாருங்கள். கம்பீரமான தோற்றம் வெளிப்படும். மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை எண்ண வேண்டாம்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 4 மட்டும் 5.
அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் வெள்ளை நிறம்.