பா.ரஞ்சித் டைரக்டில் விக்ரம் நடிக்கும் தங்கலான் படம் அதிக பொருட் செலவில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விக்ரமின் தோற்றமானது முன்பே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தில் நாயகியாக பார்வதி நடிக்கிறார். மேலும் மாளவிகா மோகனன், பசுபதி போன்றோரும் நடிக்கின்றனர்.

இதன் சூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. நடப்பு ஆண்டு இறுதியில் தங்கலான் திரைப்படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர். இப்படத்தை ஆஸ்கார் போட்டிக்கும், கேன்ஸ் போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் அனுப்ப உள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். தங்கலான் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய பல்வேறு மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.