லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் மும்முரமாக நடைபெற்றதை அடுத்து அண்மையில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. அதன்பின் இப்படத்தின் 2-ஆம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திரிஷாவின் பிறந்தநாளையொட்டி படக்குழுவானது விஜய் மற்றும் திரிஷா இருவரும் இணைந்து நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து உள்ளது. இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.