
நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் நம்முடைய தேவர் குல சமுதாயத்திற்கு எந்த ஒரு அதிகாரமும் கொடுக்கவில்லை. இது எதோ வாக்குகளுக்காக…. ஓட்டு களுக்காக நிச்சயமாக ஐயர் செய்தது கிடையாது…. செய்யப் போவதும் கிடையாது…. உண்மையிலேயே அடித்தள மக்கள் முன்னுக்கு வர வேண்டும் என்ற நோக்கம் தான்.
அதே வேளையில் தேவர் குல சமுதாயத்தில் எந்த பிரச்சனை இருந்தாலும்…. உடனடியாக எப்படித்தான் அந்த காலத்தில் வந்தார் என்று எனக்கு தெரியவில்லை…இங்கே சளி பிடித்தால் அங்கு தும்பல் வரும். அங்க பிரச்சனைனா… எந்த பிரச்சினையாக இருந்தாலும் உடனே கிளம்பி பஸ்ல ஏறுவார் அல்ல ட்ரெயின்ல ஏறுவார்.
1995 கலவரத்தில் ஐயா உடனடியா வந்தாரு. பிறகு 1997இல் மறுபடியும் ஒரு கலவரம் வந்தது. ஒரு வாரம் மதுரையில் தங்கி அந்த கலவரத்தை அமைதி படுத்திட்டு போனாரு.1999 மாஞ்சோலை பிரச்சினை அதற்குப் பிறகு ஐயா வந்தது.
இது தேவேந்திரர்கள் பிரச்சனை மட்டும் கிடையாது…. மீனவர்கள் பிரச்சனை…. கூடங்குளம் பிரச்சனையாக இருந்தாலும் சரி…. தூத்துக்குடி டைட்டானியம் காற்றாலை நிறுவனம் கிட்டத்தட்ட 10,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டார்கள். அதற்கு ஐயா வந்து போராட்டம் நடத்திய பிறகு தான் அதை கைவிட்டார்கள்..
இப்படி எந்த சமுதாயம் இருந்தாலும் சரி…. அதற்காக ஐயா அவர்கள் தொடர்ந்து குரல் கொடுப்பது எல்லாம் கிடையாது, போராட்டம் நடத்தி…. அதற்கு தீர்வு காண்பது. இப்படி ஒரு போராளி எங்களுடைய மருத்துவ அய்யா…. அவர்கள் வழிநடத்தலில் இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இந்த இனிய விழாவை நாங்கள் வருகை தந்திருக்கின்றோம் என தெரிவித்தார்.