விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் இருக்கின்றார்கள். அதற்கு ஒரு எடுத்துகாட்டாக தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் நடிகர்களை கொண்டாடும் ரசிகர்கள் VS ரசிகர்கள் மீது கோபத்தில் உள்ள பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடந்தது.

இதில் முண்ணனி நடிகர்களின் ரசிகர்கள் கலந்து கொண்ட நிலையில் சூடான் நாட்டைச் சேர்ந்த ரசிகர் ஒருவரும் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது, தான் தமிழ் திரைப்படங்களை அதிகம் விரும்பி பார்ப்பதாகவும் நடிகர் விஜயின் தீவிர ரசிகர் எனவும் தனது மொபைல் பின்னால் விஜயின் புகைப்படம் இருந்ததையும் காட்டினார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.