வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சென்ற ஜனவரி மாதம் துணிவு திரைப்படம் ரிலீசானது. இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. துணிவு திரைப்படத்தின் பட்ஜெட் மொத்தம் 145 கோடியாகும். இதில் இப்படம் இதுவரை 193 கோடி வரை வியாபாரம் செய்திருக்கின்றது. மேலும் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே தயாரிப்பாளருக்கு 48 கோடி வரை லாபம் கிடைத்திருக்கின்றது. மேலும் படம் வெளிநாட்டிலும் ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் 65 கோடி வரை வசூல் செய்திருக்கின்றது.

இதில் 24 கோடி வரை ஷேர் கிடைத்திருக்கின்றது. இதிலிருந்து லைக்கா நிறுவனத்திற்கு 7 கோடி ரூபாய் லாபம் கிடைத்திருக்கின்றது. கேரளாவில் போட்ட பணம் எடுக்கப்பட்டு இருக்கின்றது. கர்நாடகாவில் வெளியான இந்த திரைப்படம் 13.5 கோடி வரை வசூல் செய்து இருக்கின்றது. இதில் ஆறு கோடி ஷேர் வந்திருக்கின்ற நிலையில் 2 கோடி லாபம் கிடைத்திருக்கின்றது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நஷ்டம் இல்லாமல் போட்ட முதலீடை எடுத்திருக்கின்றது. தமிழகத்தில் 130 கோடி ரூபாய் வரை வசூல் செய்து இருக்கின்றது. இதன் மூலம் இத்திரைப்படம் மிகப்பெரிய லாபத்தை கொடுத்திருக்கின்றது.