வைகைப்புயல் வடிவேலுவின் நகைச்சுவைக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அவரது உடல்மொழிக்கும். உச்சரிப்புக்கும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் பெரிய ரசிகர்கள். இவர் இல்லாத மீம்ஸ் டெம்ப்ளேட்டே கிடையாது.  இந்நிலையில் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருதினை உயர்நீதிமன்ற நீதியரசர் வள்ளிநாயகம் தலைமையின் கீழ் இயங்கும் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் அவருக்கு வழங்கி கெளரவித்துள்ளது. வடிவேலுக்கு பொழுதுபோக்கு பிரிவின் கீழ் விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.