சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்திருந்தார்கள். இந்த திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பல சர்வதேச விருதுகளையும் வென்றது. திரையுலகினர் பலரும் இந்த திரைப்படத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தார்கள்.

இந்த நிலையில் மாமனிதன் திரைப்படம் ஒரு சர்வதேச விருதை பெற்றிருக்கின்றது. அமெரிக்காவில் நடந்த 29-வது சரோனா சர்வதேச திரைப்பட விழாவில் இந்த திரைப்படம் சிறந்த ஊக்கமளிக்கும் திரைப்படம் என்ற விருதை பெற்றிருக்கின்றது. இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.