தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லியில் பாஜகவின் மூத்த தலைவர்களை   தனித்தனியாக சந்தித்து  வந்து கொண்டிருக்கிறார். அதன் அடிப்படையில் நிர்மலா சீதாராமன் சந்தித்துள்ளார். நிர்மலா சீதாராமன் மிக முக்கியமான ஒரு இடத்தில் இருக்கக்கூடியவர். அரசு ரீதியாகவும்,  அரசியல் ரீதியாகவும் பாரதிய ஜனதா கட்சியின் வலிமை வாய்ந்த ஒரு தலைவராக இருக்கக் கூடியவர். அவரை தற்போது பாஜகவின் மாநில தலைவராக இருக்கக்கூடிய அண்ணாமலை சந்தித்து பேசி இருக்கின்றார்.

ஏற்கனவே நிர்மலா சீதாராமன் அவர்கள்  தமிழ்நாட்டின் அரசியல் குறித்தும், அதிமுக – பாஜக கூட்டணி முறிவு  குறித்தும், அது ஏற்படுத்தும் தாக்கம் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவான அறிக்கையை கட்சியின் தலைமைக்கு தாக்கல் செய்திருக்க கூடிய நிலையில்,  அண்ணாமலையிடம் நிர்மலா சீதாராமன் இதற்கான விளக்கங்களை கேட்டு பெற்று இருக்கலாம் என்பதான தகவலாக தான் இருக்கின்றது.