இந்தியா திறமைகளின் பொக்கிஷமாக விளங்குகிறது. இங்கு வாழும் மக்கள், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தங்கள் திறனால் உலகை வியப்பில் ஆழ்த்துவதற்கு தயாராக இருக்கின்றனர். இதோ, ஒரு இந்திய இளைஞர், தனது அபார திறமையால் வெளிநாட்டவரை ஆச்சரியத்தில் மூழ்கடித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ, 1 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று, 4 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இந்தியர்கள் எங்கு சென்றாலும், தங்கள் திறமையால் தடம் பதிக்க தவறுவதில்லை என்பதை இந்த வீடியோ மீண்டும் நிரூபித்துள்ளது.
View this post on Instagram
வீடியோவில், துபாயைச் சேர்ந்த ஒருவர், ஒரு இந்திய இளைஞரை நிறுத்தி, தனது பாரம்பரிய இசைக் கருவியான தார்புக்காவை (darbuka) வாசித்து காட்டி, அவரையும் வாசிக்கச் சொல்கிறார். அவரது பாவனைகளைப் பார்க்கும்போது, இந்திய இளைஞரை அவர் இளக்காரமாக எண்ணியது தெரிகிறது.
ஆனால், இந்தியர் தார்புக்காவை கையில் எடுத்து, தனது திறமையான விரல்களால் அற்புதமாக வாசிக்கத் தொடங்கியவுடன், அந்த வெளிநாட்டவர் திகைப்பில் உறைந்து போனார்.
இந்திய இளைஞரின் இசைத் திறமை, அந்த இடத்தையே உற்சாகத்தில் ஆழ்த்தியது. இணையவாசிகள் இதைப் பார்த்து, “இந்தியர்களை ஒருபோதும் இலேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்றும், “இதுதான் இந்தியாவின் உண்மையான பலம்” என்றும் பெருமையுடன் கருத்து தெரிவித்தனர்
. சிலர் வேடிக்கையாக, “வெளிநாட்டவருக்கு இப்போது புரிந்திருக்கும், இந்தியர்கள் வார்த்தைகளால் மட்டுமல்ல, செயலாலும் பதிலடி கொடுப்பார்கள்” என்று கமெண்ட் செய்துள்ளனர்.
