தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் விஜய், அஜித் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். இவருக்கு தற்போது தமிழில் போதிய அளவு வாய்ப்புகள் இல்லாத நிலையில் பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அதன் பிறகு நடிகை தமன்னா பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருவரும் அண்மையில் கோவாவில் புத்தாண்டை கொண்டாடிய போது தமன்னா விஜய் வர்மாவுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகை தமன்னாவின் மொத்த சொத்து மதிப்பு 110 கோடி என்று கூறப்படுகிறது. அதன் பிறகு நடிகை தமன்னா ஒரு படத்தில் நடிப்பதற்கு சுமார் 4 முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்குவதோடு, திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுவதற்கு ரூபாய் 60 லட்சம் வரை சம்பளமாக வாங்குவதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் நிகழ்ச்சியில் 10 நிமிடம் பங்கேற்றத்திற்காக நடிகை தமன்னா ரூபாய் 50 லட்சம் சம்பளம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

பல பிரபலமான விளம்பரங்களிலும் நடிகை தமன்னா நடித்து வருவதால் அதன் மூலமும் பல கோடி வருமானங்கள் வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை தமன்னா ஒரு நடிகை என்பதை தாண்டி ஒரு தொழிலதிபரும் கூட. கடந்த 2015-ம் ஆண்டு ஒயிட் & கோல்ட் என்ற பெயரில் நடிகை தமன்னா ஒரு நகைக்கடையை திறந்தார். உலகின் 5-வது பெரிய வைரமும் தமன்னாவிடம் தான் இருக்கிறது. இந்த வைரத்தின் விலை 2 கோடி ரூபாய் ஆகும். இந்த வைரத்தை பிரபல நடிகர் ராம்சரணின் மனைவி உபாசனா நடிகை தமன்னாவுக்கு பரிசாக கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவருக்கு மும்பையில் உள்ள வெர்சோ நகரில் சுமார் 16 கோடி மதிப்பிலான ஒரு ஆடம்பர பங்களா வீடு இருக்கிறது. இவர் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், லேண்ட் ரோவர் டிஸ்கவரி, மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற பல ஆடம்பரமான சொகுசு கார்களையும் வைத்துள்ளார். இவர் பயன்படுத்தும் கைப்பையின் விலை மற்றும் சுமார் 3 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. மேலும் நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தான் தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.