கல்கி 2898 AD  திரைப்பட டீஸர் வெளியீட்டு விழாவில் அமிதாப்பச்சன் கமல் குறித்து பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெரும் பொருட் செலவில்  உலக சினிமா தரத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில், நடிகர் பிரபாஸ் அவர்களின் அடுத்த படம் இருக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், படத்திற்கான டீசர் மற்றும் டைட்டில் சான் டியாகோ-ல்  இன்று வெளியானது. இவ்விழாவில் நடிகர் கமலஹாசன் கலந்து கொண்டு படத்தில் தான் வில்லனாக நடிப்பதாக ஒப்புக்கொண்டு பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், நாங்கள் கதைகளை உருவாக்குகிறோம். மக்கள் நட்சத்திரங்களை உருவாக்குகிறார்கள். அமிதாபச்சன், பிரபாஸ், ராணா ஆகியோரின் நடிப்பு இதை உணர்த்தும் என அவர் பேசிக் கொண்டிருக்கையில், வீடியோ கான்பரென்சில் இணைந்திருந்த அமிதாப்பச்சன் குறுக்கிட்டு அடக்கமாக இருப்பதை நிறுத்துங்கள் கமல். எங்கள் எல்லோரை விடவும் நீங்கள் எப்போதும் சிறந்தவர் என தெரிவித்தார். இது கமலஹாசன் ரசிகர்களிடையே பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது.