ஓபன்ஹெய்மர்  திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள 70mm imax தொழில்நுட்பம் குறித்து கிறிஸ்டோபர் நோலன் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் மார்வெல் DC உள்ளிட்ட நிறுவனங்களின் திரைப்படங்களுக்கும், Mission Impossible, கான்ஜுரிங், ஜேம்ஸ் பாண்ட் உள்ளிட்ட franchise திரைப்படங்களுக்கும் அதிக அளவிலான வரவேற்பு உண்டு. இத்திரைப்படங்களுக்கு இணையாக ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான கிரிஸ்டோபர் நோலன் திரைப்படத்திற்கும் இந்தியாவில் பெரிய அளவிலான வரவேற்பு என்பது சமீப காலமாக கிடைத்து வருகிறது. இப்படியான வரவேற்பு அவருடைய டார்க் நைட் திரைப்படத்திற்கு பின்பு தான் கிடைத்தது.

டார்க் நைட் திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் கடந்த நிலையிலும், இன்றளவும் பலரும் திரைப்படத்தைப் பற்றி தொடர்ச்சியாக பேசி வருகின்றனர். இதன் காரணமாகவே, தொடர்ந்து நோலன் இயக்கத்தில் வெளியாகும் அனைத்து படங்களும் இந்தியாவில் கணிசமான வெற்றியை பதிவு செய்து வந்தன. இதை தொடர்ந்து இன்று வெளியான ஓபன் ஹெய்மர் திரைப்படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்களிடையே காணப்பட்டது. அதற்கு காரணம்,

படத்தில் அணுகுண்டு வெடிக்கும் காட்சிகள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் உண்மை தன்மையுடன் நேர்த்தியான புகைப்பட கலையால் எடுக்கப்பட்டுள்ளதென  கிறிஸ்டோபர் நோலன் தெரிவித்தது தான். மேலும் படம் முழுக்க 70 MM  ஐமேக்ஸ் film ரீல்-இல் எடுக்கப்பட்டுள்ளதால் imax திரையரங்கில்  காண்பவர்களுக்கு நல்ல விருந்தாக காட்சியளிக்கும். இப்படத்திற்கான மொத்த நீளம் 3 மணி நேரம் 9 வினாடிகள்(180 நிமிடம்).

படத்திற்கு பட குழு மொத்தம் செலவிட்டது 10 கோடி US டாலர். அதன்படி ஒரு நிமிடத்திற்கு 5 லட்சத்திற்கும் மேல் US  டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சராசரியாக ரூ40 கோடி. படம் மீதான ஆர்வத்தை அதிகரிக்க imax படப்பிடிப்பு குறித்தும் அனுபம் குறித்தும் இயக்குனர் நோலன் பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில்,

படத்தின் 70mm ஐமேக்ஸ் film ரீல் நீளம் மட்டுமே 11 மைல் கிட்டத்தட்ட 17 கிலோமீட்டர் நீளம் கொண்டது எனவும், படத்தில் அங்கங்கே வரக்கூடிய பிளாக் & ஒயிட் காட்சிகள் ஐமேக்ஸ் கேமராவில் பதிவு செய்ய முடியாது என்பதற்காக அதற்கான பிரத்தியேகமான ரீல் தயாரிக்கப்பட்டதற்கு பின்பு படம் எடுக்கப்பட்டதாகவும், IMAX-இன்   முதல் பிளாக் & ஒயிட் திரைப்படமாக இது இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவை அனைத்துமே படத்தின் மீதான எதிர்பார்ப்பை கணிசமாக அதிகரித்த நிலையில், எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்துள்ளதாக சினிமா ரசிகர்கள் அந்த வீடியோ-க்கு கீழ் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.