நடிகர் பிரபாஸ் நடிக்கும் கல்கி 2898 AD படத்திற்கான டீசர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நடிகர் கமலஹாசன் பேசினார். 

பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு இந்தியாவின் மிகப்பெரிய திரை நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்தவர் பிரபாஸ். பாகுபலியை  தொடர்ந்து இவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை தழுவின. இதைத்தொடர்ந்து மிகப்பிரமாண்டமாக எடுக்கப்படவுள்ள அடுத்த பிரபாஸ் படத்திற்கான டைட்டில் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. அதன்படி, படத்திற்கு கல்கி 2898 AD  என பெயரிட்டப்பட்டுள்ளது.

இப்படத்தில் இந்தியாவின் பிரபல நட்சத்திரங்கள் பலர் நடிக்க உள்ள நிலையில், பன்முக திறமை கொண்ட நடிகரான கமலஹாசன் இதில் வில்லனாக நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். படத்திற்கான டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய கமலஹாசன், நான் ஒத்த சினிமாவில் இருந்து வந்தவன். எதிர்மறை என்ற ஒன்று இல்லாமல் நேர்மறை என்பது இல்லை.

எனவே படத்தில் எதிர்மறையான கதாபாத்திரம் என்பது மிக முக்கியமான ஒன்று. அப்படி ஒரு கதாப்பாத்திரம், எனக்கு கிடைத்ததன்  காரணமாகவே இப்படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார். ஆளவந்தான், தசாவதாரம் உள்ளிட்ட படங்களுக்கு அடுத்தபடியாக கமல் வில்லனாக மீண்டும் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.