தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை நடிகை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்ட நிலையில் நீல் கிச்சலு என்ற ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தான் கர்ப்பமாக இருக்கும் போது குண்டாக இருந்ததாகவும் என் மகன் பிறந்த போது அவனை சில மாதங்களிலேயே தனியாக விட்டுவிட்டு படப்பிடிப்புக்கு சென்றதாகவும் பலர் தன்னை கேலி செய்ததாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது, நான் என்னுடைய மகனுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன். யார் என்ன நினைத்தாலும் அவனுக்கு தான் முதலில் முக்கியத்துவம். என் மகனை விட்டுவிட்டு படப்பிடிப்புக்கு செல்லும் போதெல்லாம் மிகுந்த வேதனையோடு தான் செல்கிறேன். நான் என் மகனுக்காக நேரம் ஒதுக்கிவிட்டு என் பணியையும் செய்கிறேன். என் மகன் முன்பு நான் ஒரு தைரியமான நல்ல தாயாக இருக்க விரும்புகிறேன். மேலும் நான் படப்பிடிப்புக்கு செல்வதால் அவனை அலட்சியம் செய்வதாக அர்த்தம் கிடையாது என்று கூறியுள்ளார்.