பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுரூஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் டீசர் வீடியோவுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அண்மையில் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் ஆதிபுருஷ் படம் ஜூன் 16-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் ராமராக பிரபாஸும், சீதையாக கீர்த்தி சனனோனும், ராவணனாக சைஃப் அலி காணும் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் ஆதி புருஷ் திரைப்படம் வெற்றி பெறுவதற்காக தெலுங்கானாவில் உள்ள பத்ராச்சலம் ராமர் கோவிலுக்கு வழிபாடு செய்வதற்காக நடிகர் பிரபாஸ் சென்றுள்ளார். அங்கு ஆதிபுருஸ் படம் வெற்றி பெறுவதற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பிறகு கோவில் நிர்வாகத்திடம் நடிகர் பிரபாஸ் 10 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார். மேலும் நடிகர் பிரபாஸின் இந்த செயல் அவருடைய ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.