பிரபல நடிகை அடா ஷர்மா நடிப்பில் தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த படத்தை விபுல்ஷா தயாரிக்க, சுதிப்டோ சென் இயக்கி இருந்தார். இப்படம் 32 ஆயிரம் இந்து மத பெண்களை மூளை சலவை செய்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றி பயங்கரவாத அமைப்பில் ஈடுபடுவது போன்று அமைந்திருந்தது. இந்த படம் வெளியான புதிதில் தொலைக்காட்சிகளில் பல்வேறு விவாதங்கள் நடந்ததோடு பல அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தார்கள்.

தமிழ்நாட்டிலும் முதல் நாள் தியேட்டர்களில் ரிலீசான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் அடுத்த நாள் வெளியாகவில்லை. இந்நிலையில் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான கேரளா ஸ்டோரி திரைப்படம் தற்போது 100 கோடி வரை வசூல் சாதனை புரிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த வசூல் பற்றி நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கையில் படத்தின் எதிர்ப்பு காரணமாகத்தான் 100 கோடி வசூல் சாதனை புரிந்துள்ளதாக கூறுகிறார்கள்.