McAfee என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றே நடத்தியது. அதில் சில மோசடி ஆப்களை அந்நிறுவனம் ஆய்வில் கண்டுபிடித்துள்ளது. அதன்படி கீழ்க்கண்ட ஆப்கள், நம் செல்போனில் உள்ள வங்கிக் கணக்கு விவரங்கள், யுபிஐ பாஸ்வோர்ட், போட்டோ, வீடியோ போன்றவற்றை திருடி ஹேக்கர்களுக்கு அனுப்பி விடுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது RupaihKilat – Dana cair, KreditKu-Uang Online, Dana Kilat-Pinjaman kecil, Cash Loan- Vay tien, RapidFiance, PretPourVous Huayna Money ஆகிய ஆப்கள் நமது செல்போனில் உள்ள விவரங்களை ஹேக்கர்களுக்கு அனுப்புவதாக கூறப்படுகிறது. அதனால் இந்த ஆப்கள் உங்களது செல்போனில் இருந்தால், உடனடியாக டெலிட் செய்யுங்கள் என்று அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.