மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ராணிப்பேட்டையில் அதிமுக சார்பில், திமுக அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசியதாவது, “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 4 ஆண்டுகளாக கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.
தற்போது தான் எழுந்திருத்து உள்ளார். எனவே “உங்களுடன் ஸ்டாலின்” என்ற நாடகத்தை நடத்த தொடங்கியுள்ளார். நீங்கள் யாரும் ஏமாறக்கூடாது.
அதிமுக- பாஜக கூட்டணி வைத்தால் என்ன?. அவர்கள் வாஜ்பாய் காலத்தில் பாஜக கூட்டணி வைத்திருந்தார்கள். அதிமுக- பாஜக கூட்டணி என்பது தெளிந்த நீரோடை போன்றது. அதில் கல் எறிபவர்கள் காணாமல் போவார்கள்.
கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியும், அமித் ஷாவும் தெளிவாகப் பேசி விட்டார்கள். வேறு யாரும் கூட்டணி குறித்து தேவையில்லாத கருத்துக்களை கூற வேண்டாம்.
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதலமைச்சராக கோட்டைக் அனுப்ப வேண்டும். மு.க. ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இதற்காக தான் மக்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வரும் தேர்தலில் அதிமுக ஆளும் கட்சியாகவும், பாஜக கூட்டணி எதிர்கட்சியாகவும் நிச்சயம் வரும் அதனை மக்களும் விரும்புகின்றனர். என பேசினார்.
