தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரது 45 வது திரைப்படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்க உள்ளார். இந்த படத்தை ஜிம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கயுள்ளது. இந்நிலையில் இந்த படக்குழு சமீபத்தில் அதிகாரப்பூர்வமான போஸ்டரை வெளியிட்டு இருந்தது. இந்த படத்தின் இசை அமைப்பாளர் சாய் அப்யங்கர். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தற்போது கோவையில் நடைபெறுகிறது.
இந்நிலையில் தற்போது படக்குழுவினர் அடுத்த அப்டேடை வெளியிட்டுள்ளது. அதில் இந்த படத்தின் ஹீரோயினாக த்ரிஷா நடிக்க உள்ளார். முன்னதாக சூர்யா மற்றும் திரிஷா ஜோடியாக 2 படங்கள் நடித்துள்ள நிலையில், தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.