தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று முதல் மார்ச் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழை பெய்யும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.