மெட்ரோ பணிகளுக்கு இடையூறாக இருப்பதால் சென்னையில் உள்ள காந்தி சிலை வேறொரு இடத்திற்கு மாற்றப்பட இருக்கிறது. சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ அமைக்கப்பட்டு வருகிறது. காமராஜர் சாலையில் சென்னையின் அடையாளமாக உள்ள காந்தி சிலை மெட்ரோ பணிகளுக்கு இடையூறாக இருப்பதால் வேறு இடத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட உள்ளது.

இந்த சிலை கடந்த 1959ல் அப்போதைய பிரதமர் நேருவால் திறந்து வைக்கப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டத்தின் பணிகளுக்காக காந்தி சிலையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டிய சூழல் நிலவியது. அதனை தொடர்ந்து தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி கோரி இருந்தது. இதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியதை அடுத்து, இம்மாத இறுதிக்குள் காந்தி சிலையை இடமாற்றம் செய்ய மெட்ரோ நிர்வாகமானது முடிவு செய்துள்ளது.