தி.மு.க கட்சியின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. திருச்சியிலுள்ள இவரது வீட்டில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளது. அதோடு அங்கிருந்த பைக்குகளும் சேதமடைந்துள்ளது.

திருச்சி சிவா வீடு தாக்கப்பட்டது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்த 6 பேரிடமும் அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது. திருச்சி சிவா வீட்டின் அருகே உள்ள மைதானத்தை கேஎன் நேரு திறந்து வைத்தார். இந்த விழா அழைப்பிதழில் திருச்சி சிவாவின் பெயர் இல்லை என அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். இதன் காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது

இந்நிலையில் கே.என்.நேரு தரப்பினர் தனது வீட்டை தாக்கியது குறித்து திருச்சி சிவா பேசினார். அதாவது, என் வீட்டின் மீதான தாக்குதல் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது. தனிநபரை விட கட்சி தான் முக்கியம் என நினைப்பவன் நான் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். மேலும் மிகுந்த மனசோர்வில் இருப்பதால் தற்போது எதுவும் பேச விரும்பவில்லை என பாதியிலேயே பேட்டியை முடித்துக்கொண்டு கிளம்பி விட்டார்.