அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, 1984இல் தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சியான கலைஞர் கருணாநிதி எம்ஜிஆர் இப்போது  உயிரோடு இல்ல, அவர் பொம்மையா வச்சிருக்காங்க. இங்க இருக்கிறவுங்க சும்மா ஆட்டி படைக்கிறாங்க.. அமைச்சர்கள் சும்மா ஏமாத்துறாங்க. அப்ப எல்லாம் டிவி இல்ல..

உடனே அவர் சொன்னாரு… என் நண்பர் வந்த உடனே….  அப்படியே முதலமைச்சர் பதவியை அவரிடம் தூக்கி கொடுத்துடுறேன் என சொல்லி வாக்கு கேட்டார். எவனாச்சும் சொல்லுவானா… ஒரு பொது தேர்தலில்  தன்னை எதிர்த்து நிற்கின்ற தலைவரை…..  அவருக்கு ஓட்டு போடாதீங்க,  எனக்கு ஓட்டு போடுங்க. நான் வந்த உடனே அவருக்கு கொடுத்துடறேன் என பேசினார்.

அந்த மாதிரி கேடுகெட்ட கட்சி தான் திமுக. கேடுகெட்ட குடும்பம் தான் நம்முடைய கலைஞர் குடும்பம். ஆனால் மக்கள் நம்பவில்லை.  தலைவர் எப்படி முதலமைச்சரா போனாரோ, அதே மாதிரி முதலமைச்சராகவே வந்தாரு. வெற்றி பெற வைத்த மக்கள் நம்முடைய தமிழக மக்கள்….  பாசத்திற்கு அடிமையான மக்கள் தமிழக மக்கள். புரட்சித்தலைவர் அள்ளி அள்ளி கொடுத்த வள்ளல் பெருமான்.

உடனே பார்த்தாங்க… நம்முடைய தலைவர்கள். இன்னைக்கு மாற்று முகாமில் இருக்காங்க. உடனே தலைவர் கிட்ட இதையெல்லாம் சொன்ன உடனே… தலைவர் கையை காமிறார்.   சாப்பிடற மாதிரி… ஜானகி அம்மா ஊட்டுற  மாதிரி… சட்டையை போட்டு நடக்கிற மாதிரி… இப்படி  கேசட்டை நாங்க எல்லாம் போட்டோம்…  தெருவில் கொண்டு போயி..  பொது தேர்தலில் அந்த கேசட்டை போட்ட பிறகுதான் கருணாநிதிக்கு வெடவெடத்து  போயிடுச்சு.  அப்பவே தோல்வியை ஒப்புக்கொண்டார். அப்படி ஜெயிச்சது தான் அண்ணா திமுக தெரியுங்களா ? என பேசினார்.