தீபாவளியை முன்னிட்டு கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 10% போனஸ், கருணைத்தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். போனஸ்  சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும். போனஸ் சட்டத்தின் கீழ் வராத தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு 2400 கருணைத்தொகை, தலைமை சங்கம் மற்றும் மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு 3000 ரூபாய் வரை கருணைத்தொகை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.