
SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எந்த காலத்திற்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கொள்கையை விட்டுக் கொடுக்காது. அதில் உறுதியாக இருக்கின்றோம். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலும் சரி, புரட்சித்தலைவி அம்மா காலத்திலும் சரி, நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்று சொன்னால், அப்பொழுது சூழ்நிலையின் காரணமாக கூட்டணி வைத்தோம்.
அதே நேரத்தில் கொள்கை என்று வருகிற பொழுது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கொள்கைக்கு தான் முன்னுரிமை கொடுக்கும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செயற்குழு கூட்டத்திலே….. தலைமைக் கழகத்தில் நடைபெற்ற பொழுது, இனி பிஜேபி கட்சியினுடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி இல்லை என்பதை அறிவித்து விட்டோம்.
அதற்கு பிறகும் ஸ்டாலின் மறைமுகமாக கூட்டணி வைத்து இருக்கிறார்கள்… கள்ள தொடர்போடு கூட்டணி வைத்து இருக்கிறார்கள்… என்னென்ன வார்த்தைகள் எல்லாம் போட்டு பேசுகிறார் பாருங்க. ஆக அவர்கள் பொறுக்க முடியவில்லை. இதுவரை சிறுபான்மை மக்களை ஏமாற்றி தந்திரமாக வாக்குகளை பெற்று வந்த ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது, ஜுரம் வந்துவிட்டது, இன்றைய நிலையில் பிதற்றிக் கொண்டு இருக்கின்றார் என தெரிவித்தார்.