ADMK கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் Ops தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய  கொள்கை  மற்றும்  கோட்பாடுகளை எல்லாம் மிகச் சிறப்பாக உங்களுடையே எடுத்துச் சொன்னார்கள். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் 1972 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக என்ற இந்த மாபெரும் இயக்கத்தை தொண்டர்களுக்கான இயக்கமாக….. தொண்டர்கள் இயக்கமாக…. இதை உருவாக்கினார்கள்…

பத்தாண்டு காலம் ஒரு சிறப்பான முதலமைச்சராக நல்ல பல திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்த முதலமைச்சராக தமிழக மக்கள் அனைவரும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை நேசிக்கின்ற தலைவராக தமிழகத்தை உருவாக்கினார்கள். புரட்சித் தலைவர் அவர்களின் மறைவுக்குப் பின்னால், இதய தெய்வம்  புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள். 30 ஆண்டுகாலம் கழகத்தினுடைய பொதுச் செயலாளராக பணியாற்றி, நம்முடைய இயக்கத்திற்கு வந்த வேதனைகள், சோதனைகள் இந்த இயக்கத்தை அழித்துவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் செய்த சதி  வேலைகள்,  சூழ்ச்சிகள் இவைகள் எல்லாம் எதிர்கொண்டு….

தன் மீது போடப்பட்ட வழக்குகளை எல்லாம் எதிர்கொண்டு….  அதில் வாதாடி, தான் ஒரு நிரபராதி என்ற புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் நிரூபித்து, இந்த இயக்கத்தை வலுவான இயக்கமாக….. திராவிட இயக்கத்தினுடைய பரிணாம வளர்ச்சியாக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,  புரட்சித் தலைவர் MGR…. இதய தெரிவும் மாண்புமிகு  புரட்சித்தலைவி அம்மா அவர்கள், சமுதாய சீர்திருத்தத்திற்காக வாழ்ந்தவர் தந்தை பெரியார், தமிழ் சமுதாயம் தலைநிமிர்ந்து நடப்பதற்காக வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள், ஏழை தாய்மார்களின் கண்ணீரை துடைப்பதற்காகவே வாழ்ந்தவர்  நம்முடைய புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள்,

இந்த முப்பெரும் தலைவர்களின் ஆன்மா, அறிவு, ஆற்றல் ஆகிய குணங்களை ஒருங்கே பெற்ற ஒரே தலைவர். நம்முடைய இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா தான் என்பது நாடு மக்கள்,  நன்கறிந்து அனைத்து தர மக்களும், ஜாதி வித்தியாசம் இல்லாமல், மதங்கள் வித்தியாசம் இல்லாமல், மாண்புமிகு அம்மா அவர்களை அம்மா அம்மா அம்மா என்று, மூளை முடுக்கில் இருக்கின்ற, பட்டித் தொட்டியில் இருக்கின்ற, நகரத்தில் இருக்கின்ற, அத்தனை மக்களும் பாசத்தோடு நேசத்தோடு, தாய் அன்போடு அழைக்கின்ற ஒரு நல்ல சூழலை புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் உருவாக்கினார்கள் என பேசினார்.