கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,   தூத்துக்குடியில் அங்க பக்கீல் ஓடை என ஒரு பகுதி இருக்குது. அதுல கன மழை பொழிகின்ற போது…. அங்கிருக்கின்ற நீர்கள் எல்லாம் அந்த ஓடை வழியாக வெளியேறும் வகையில் இருந்து கொண்டிருந்தது. இதை கருத்தில் கொண்டு தான்,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கின்றபோது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து….  அந்த பக்கீல் ஓடையில் நீர் வடிகின்ற சூழலை உருவாக்குவதற்காக அந்த பணிகள் எல்லாம் துவங்கப்பட்டு…..  சுமார் 85 சதவீதம் அண்ணா திமுக ஆட்சியில்  நிறைவு பெற்றுவிட்டன. எஞ்சிய பணி 15% தான் இருந்தது. இந்த விடியா திமுக அரசு பொறுப்பேற்று இரண்டரை ஆண்டு  காலத்தில் அந்த 15 சதவீதம் பணியை கூட நிறைவேற்றவில்லை.

இதனால் அந்த ஓடை வழியாக வெளியேறுகின்ற நீர் தடைப்பட்டு,  அந்த குடியிருப்பு பகுதி முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத ஒரு சூழ்நிலையை நான் இன்றைய தினம் காலையில் சென்று பார்த்தேன். ஊடகம், பத்திரிகையும் அதை படமாக பிடித்திருக்கின்றார்கள். ஆக இப்படிப்பட்ட சூழ்நிலைதான் இன்றைக்கு தூத்துக்குடியில் நிலவிக் கொண்டிருக்கிறது .

இந்த அரசு  முன்னெச்சரிக்கை  நடவடிக்கை எடுக்கப்பட்டு…. ஏற்கனவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு கொண்டுவந்த திட்டத்தை வேகமாக…. துரிதமாக…. செயல்படுத்தி முடிக்கப்பட்டிருந்தால் அந்த ஓடை வழியாக இன்றைக்கு பெய்த மழை நீர் வேகமாக வடிவ தொடங்கி இருக்கும். மக்கள் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டார்கள். ஆனால் இந்த விடியா திமுக ஆட்சியில் இப்படிப்பட்ட பணிகள் எல்லாம் முடங்கி கிடக்கிறது, வேதனை அளிக்கின்றது என தெரிவித்தார்.