தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது குணசேகரன் இயக்கத்தில் சாகுந்தலம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. இந்நிலையில் நடிகை சமந்தா தற்போது twitter பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தொடர்ந்து ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டதால் என்னுடைய உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

தீவிர காய்ச்சல் மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளதோடு என் குரலையும் நான் இழந்துள்ளேன். இதனால் இனி தொடர்ந்து நடைபெறும் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் என்னால் கலந்து கொள்ள முடியாது. நீங்கள் வழக்கம் போல் உங்களுடைய அன்பைக் காண்பிக்க வேண்டும் என சமந்தா பதிவிட்டுள்ளார். மேலும் ஏற்கனவே நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தான் அதன் தாக்கத்திலிருந்து சற்று மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.