தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இந்த படம் தோல்வி அடைந்ததால் அடுத்த பட வாய்ப்பு கிடைப்பதற்கு விக்னேஷ் சிவனுக்கு கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆனது. இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் படத்தின் கதையை தயார் செய்து விட்டு அதை எடுக்க முடியாமல் தவித்து வந்தார். அவர் பல ஹீரோக்களிடம் கதையை கூறிய நிலையில் அனைவரும் கதையை நிராகரித்து விட்டனர். விஜய் சேதுபதியிடமும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கதை சொன்ன நிலையில் அவரும் கதை பிடிக்காமல் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டார்.

இதனால் போஸ்டர் டிசைன் கம்பெனி ஒன்றை தொடங்கி விக்னேஷ் சிவன் பல படங்களுக்கு புதிய போஸ்டர்களை உருவாக்கி வந்தார். இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் படத்தின் கதையை 20-க்கும் மேற்பட்ட ஹீரோக்களிடம் கூறிய நிலையில் மீண்டும் விஜய் சேதுபதியிடம் சென்றுள்ளார். முதலில் விஜய் சேதுபதி நடிக்க மாட்டேன் என கூறியதால் 2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நானும் ரவுடிதான் கதையை விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளார். கதை பிடிக்கவில்லை என்றாலும் தயவு செய்து என் படத்தில் நடியுங்கள் என விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதியிடம் கேட்க அவரும் கருணைக்கோட்டாவின் அடிப்படையில் ஒப்புக் கொண்டுள்ளார்.

அதாவது விக்னேஷ் சேதுபதிக்கு படங்களின் கதைகள் பிடிக்கவில்லை என்றாலும் சிலருக்காக படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வாராம். அதன்படி தான் கருணையின் அடிப்படையில் விக்னேஷ் சிவன் படத்திலும் நடிக்க விஜய் சேதுபதி ஒப்புக் கொண்டுள்ளார். இந்த தகவலை ஒரு பேட்டியில் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். மேலும் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதால் விக்னேஷ் சிவனின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.