தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிகை மீனாவின் 40 வருடத் திரையுலகை நிறைவு செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது ரஜினி பேசிய ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது நடிகை மீனா அன்புள்ள ரஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். எஜமான் படத்தின் கதையை இயக்குனர் சொன்னபோது ஹீரோயின் ஆக மீனாவை நடிக்கவேண்டும் என கூறியுள்ளார். அதோடு மீனா மலையாளத்தில் நடித்த இரு படங்களின் வீடியோவையும் ரஜினிக்கு போட்டு காண்பிக்க அவரது அழகை பார்த்து மயங்கி விட்டதாக ரஜினி கூறினார்.

எஜமான் மற்றும் முத்து ஆகிய இரு படங்களில் ரஜினியுடன் மீனா இணைந்து நடித்த நிலையில் ரஜினியின் வீட்டு நிகழ்ச்சிகளில் அவர் தன் அம்மாவோடு கலந்து கொள்வாராம். அப்போது படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் பற்றி ரஜினி மீனாவிடம் கூற அந்த கதாபாத்திரத்தில் தான்தான் நடிப்பேன் என மீனா அடம் பிடித்துள்ளார். ஆனால் ரஜினி உனக்கு வில்லி கதாபாத்திரம் செட் ஆகாது. வேண்டுமானால் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடி என கூறியுள்ளார். ஆனால் மீனா விடாமல் அடம் பிடிக்க கேஎஸ் ரவிக்குமாரும்மீனாவை  சமாதானப்படுத்தியுள்ளார். நீலாம்பரியாக நடிக்க வேண்டாம் என மீனாவிடம் நான் கூறியதால் தற்போது வரை மீனாவுக்கு அந்த கோபம் என் மீது இருக்கத்தான் செய்கிறது என ரஜினி கூறியுள்ளார். மேலும் ரஜினியின் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.