தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சந்தானம் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் இங்க நான்தான் கிங்கு என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் பிரியாலயா, தம்பி ராமையா, மனோபாலா, முனீஸ் காந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நேற்று இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லர் நீண்ட நாட்களாக திருமணமாகாத சந்தானத்திற்கு ஒரு ஜமீன் குடும்பத்து பெண்ணுடன் திருமணம் நடக்கும்போது ஏற்படும் பிரச்சனைகளை விவரிக்கிறது. மேலும் நகைச்சுவை கலந்த படமாக உருவாகியுள்ள இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.