நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இதில் பல முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகர் ஷாம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, வாரிசு தடைப்படத்தில் விஜய் அண்ணனாக நடித்துள்ளேன். விஜய்யின் எளிமையும், தொழில் ஈடுபாடும், மற்றவர்களை அரவணைத்து செல்லும் குணமும் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அவர் ரிகர்சல் எடுக்காமல் முதல் டேக்கிலேயே நடித்து விடுவதால் தான் இந்த உயரத்தில் இருக்கிறார்.

படத்தில் ரசிகர்களுக்கு பிடித்த மாஸ் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். நான் விஜய்யிடம் நிறைய கற்றுக் கொண்டேன். அவருடன் படத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாதது என கூறியுள்ளார். மேலும் வெங்கட் பிரபு இயக்கிய பார்ட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருவதாகவும், புதிய படம் ஒன்றை விரைவில் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் ஷாம் கூறியுள்ளார்.