வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஜன-11ம் தேதி வெளியாகவுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படமும் வரும் ஜன-11 தேதி வெளியாகவுள்ளது.

இரண்டு திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது. இந்நிலையில் எந்த திரைபடத்திற்கு வெளிநாட்டில்  புக்கிங் அதிகமாக நடந்துள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் படி அமெரிக்கா, மலேசியா ஆகிய நாடுகளில் துணிவு திரைப்படத்திற்கு அதிகமான புக்கிங் நடந்திருப்பதாகவும் பிரான்ஸ், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் வாரிசு திரைப்படத்திற்கு அதிகமான புக்கிங் நடந்திருப்பதாகவும் செய்தி வெளியாகி இருக்கின்றது. இந்த நிலையில் வெளிநாடுகளிலும் இரு திரைப்படங்களுக்கும் சமமான வரவேற்பே கிடைத்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது.