வினோத் அளித்து வரும் பேட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஜன-11ம் தேதி ரிலீஸ் ஆகின்றது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படமும் வரும் ஜன-11 தேதி ரிலீஸ் ஆகின்றது. அஜித்-விஜய் இருவரின் திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாவதால் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மோதிக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழகத்தில்  அஜித்தை விட விஜய் தான் பெரிய ஸ்டார். விஜய் தான் நம்பர் ஒன் ஹீரோ. அவர் நடிப்பில் வெளியாகும் வாரிசு திரைப்படத்திற்கு துணிவை விட அதிக திரையரங்கு கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் தில் ராஜு பேசியிருந்தார். இந்த நிலையில் இயக்குனர் அளித்த பேட்டி அனைவரையும் கவர்ந்துள்ளது. வினோத் கூறியுள்ளதாவது, நார்மலாக சம்பாதிப்பவர்கள் பணம் இருந்தால் இரண்டு திரைப்படத்தையும் பார்க்கலாம். இல்லை என்றால் ஒரு திரைப்படம் தான் பார்க்க முடியும். எது நன்றாக இருக்கின்றது என தேடி விசாரித்துவிட்டு படத்தை பார்க்கலாம். இல்லை என்றால் ஓடிடி, டிவி, டவுன்லோடிங் இருக்கின்றது. யாரும் எதையும் தடுக்க முடியாது என தெரிவித்திருக்கின்றார்.

வினோத் மக்களின் கஷ்டத்தை தெரிந்து கொண்டு பேசுகின்றார். மேலும் எல்லா பேட்டிகளிலும் வாரிசு மற்றும் துணிவு இரண்டு திரைப்படங்களையும் வெற்றி பெற வேண்டும் எனவும் விஜய்யை தாழ்த்தி பேசாமல் பொதுவாகவே பேசுகின்றார். வினோத்தின் இந்த குணம் எங்கே,! அவரை விட வயதிலும் அனுபவத்திலும் பெரியவரான தில்ராஜு எங்கே! என சினிமா ரசிகர்கள் கூறி வருகின்றார்கள். மேலும் வினோத் துணிவு திரைப்படத்தை நான் பலமுறை பார்த்து விட்டேன். இதனால் பொங்கலுக்கு வாரிசு திரைப்படத்தை தான் முதலில் பார்ப்பேன் என தெரிவித்திருந்தார். இதற்கு ரசிகர்கள் இந்த மனுஷனுக்கு இருக்கும் மெச்சூரிட்டி கூட தில் ராஜூவுக்கு இல்லையே என அவரை விளாசி வருகின்றார்கள்.