இயக்குனர் அட்லி இயக்கும் பாலிவுட் படமான ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இந்நிலையில் பார்ஸி என்னும் முதல் வெப் தொடரில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

வருகிற பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த வெப் சீரிஸ் வெளியாக உள்ளது. இந்த வெப் சீரிசை தி ஃபேமிலி மேன் புகழ் ராஜ் மற்றும் டி.கே இயக்கியுள்ளனர். இந்நிலையில் திரில்லராக உருவாகிய இந்த வெப் சீரிஸில் ஷாஹித் கபூர், ராசி அண்ணா, ரெஜினா கசாண்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.