கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள மளிகைக் கடை ஒன்றிற்குள் ஸ்ரீராமர், சீதா தேவி மற்றும் அனுமன் ஆகியோரது ஆன்மீக உடைகளை அணிந்த மூன்று நபர்கள் உலா வரும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உலகளவில் பெரும் வைரலாகி வருகிறது. இந்தியாவில் எடுக்கப்பட்டது போலத் தோன்றும் இந்த வீடியோ, உண்மையில் கனடாவில் உள்ள ஒரு மளிகைக் கடையில் எடுக்கப்பட்டதாகும்.
<a href=”http://
Indians take over grocery store in Brampton, Canada and start chanting Hindu slogans
Literally everyone is Indian pic.twitter.com/DNpqGscqLK
— Poop World Order (@PooWorldOrderr) June 1, 2026
“>
அங்கு ஷாப்பிங் செய்து கொண்டிருந்த பெரும்பாலான இந்திய வம்சாவளி வாடிக்கையாளர்கள், இந்தத்திரையினரைக் கண்டதும் தங்களது ஷாப்பிங்கை ஒரு நிமிடம் நிறுத்தி, புன்னகையுடனும் வியப்புடனும் அவர்களை உற்று நோக்குவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவிற்கு, “கனடாவின் பிராம்ப்டனில் உள்ள மளிகைக் கடையை இந்தியர்கள் ஆக்கிரமித்து, இந்து மதக் கோஷங்களை எழுப்பத் தொடங்கிவிட்டனர்;
அங்குள்ள ஒவ்வொருவருமே இந்தியர்களாக இருக்கிறார்கள்” என்ற தலைப்புடன் பகிரப்பட்டு, இதுவரை 4 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, நெட்டிசன்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள சமூக ஊடகப் பயனர்களிடையே கலவையான மற்றும் மாறுபட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒரு தரப்பினர், “இந்தியர்கள் அதிகம் நடமாடும் ஒரு இந்திய மளிகைக் கடையில் இந்திய வம்சாவளியினர் இருப்பதிலும், தங்களது கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதிலும் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், கடையின் உரிமையாளர் அனுமதி அளித்திருக்கும் பட்சத்தில் இதில்எந்தத் தவறும் இல்லை என்றும் இதற்குச் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரம், மற்றொரு தரப்பினர், பொதுமக்களுக்கான ஒரு மளிகைக் கடைக்குள் இது போன்ற ஆன்மீக வேடமிட்டு வருவது கடவுளைக் கேலி செய்வது போல உள்ளதாகவும், இதற்கான முறையான சடங்குகளையும் கண்ணியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
