திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே சித்தாண்டிபாளையம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு சக்திவேல் என்பவர் மளிகை கடை ஒன்று நடத்தி வருகின்றார். இவர் தனது கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வாலிபர் ஒருவர் வந்துள்ளார். மேலும் அவர் தன்னை உணவு பாதுகாப்பு துறை கூறியதோடு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஏதேனும் கடையில் விற்பனை செய்யப்படுகின்றதா என சோதனை செய்ய வேண்டும் என்று கூறி மிரட்டியுள்ளார். அவ்வாறு சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது உள்ளிருந்த பிளாஸ்டிக் பொருள்களை அப்புறப்படுத்துமாறு சக்திவேளிடம் கூறியுள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய சக்திவேல் கடைக்குள் இருந்த பிளாஸ்டிக் பொருட்களை வெளியே எடுக்க சென்றுள்ளார் அப்போது கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த ₹9000 பணத்தை திருடிக் கொண்டு அந்த வாலிபர் அங்கிருந்து புறப்பட்டு உள்ளார். இதனால் வாலிபர் மீது சக்திவேலுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பக்கத்து கடைக்காரர்கள் உதவியுடன் சக்திவேல் வாலிபரை பிடித்து குன்னத்தூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் பெயரில் காவல்துறையினர் விரைந்து வந்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கோவை பீளமேடு காந்தி நகர் பகுதியில் சேர்ந்த சுரேஷ்குமார் என்பது தெரிய வந்தது. இவர் இதுபோல பெருமாநல்லூரிலும் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. பின்னர் காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் இவர் மீது ஏற்கனவே சூலூர், பல்லடம் போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் காவல் துறையினர் அந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.