கரூர் மாவட்டத்தில் மண்டல தலைவர் துரைராஜ் தலைமையில், அம்மாவட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மற்றும் பென்சனர் நலச்சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேலும் இந்த கூட்டத்திற்கு கவரவத் தலைவர் மணி  முன்னிலை வகித்துள்ளார். இக்கூட்டத்தில்  சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான 89 மாத டி.ஏ. உயர்வு மற்றும் ஊதியப்படி வழங்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து  2022-ம் ஆண்டிற்கான ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு உரிய 7 பண பலன்களை மற்றும் மருத்துவ காப்பீடுகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.