சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் அமைச்சர் சேகர்பாபு  நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு அதிகாரிகளிடம், மார்க்கெட்டில் இருக்கும் வியாபாரிகளுக்கு மற்றும் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேட்டி கொடுத்தார். அதாவது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மூலம் 21 ஏக்கர் நிலப்பரப்பில் கோயம்பேடு மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு ஆய்வு மேற்கொண்டதில், மலர் வணிக பகுதியிலும், ஏற்கனவே திறக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கின்ற பணியாளர்கள் தங்கும் விடுதி, ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகளில் வியாபாரத்துக்கு உட்படுத்தாமல் இருக்கின்ற கடைகளின் நிலையை குறித்து கள ஆய்வு செய்தோம். கோயம்பேடு வணிக வளாகத்தை தரம் உயர்த்தும் நோக்கில் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனை பயன்படுத்தி பல்வேறு பணிகளை செய்வது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பிப்ரவரி மாதம் வரை  4 கட்டங்களாக கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும்  கூறியுள்ளார். இந்த ஆய்வினை முடித்த பிறகு செய்ய வேண்டிய பணியினை குறித்த அறிக்கையானது தயார் செய்யப்படும். இதனையடுத்து முதலமைச்சர் நடத்திய ஆய்வு கூட்டத்தில் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் தனியாக ஒரு காவல் நிலையத்தை, இடைத்தரகர்கள் போன்ற பிரச்சினைகள் இன்றி செயல்பட ஏதுவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதைபோல் தொழிலாளர்கள் பகலில் பணி முடித்து இரவு நேரத்தில் ஓய்வு எடுப்பவர்கள் மற்றும் இரவில் பணியை முடித்து பகல் நேரத்தில் ஓய்வெடுப்பவர்களுக்கு தேவையான தங்கும் இருப்பிட வசதியை மேம்படுத்துவதே  முதல் குறிக்கோளாக எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.