கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியில் குணசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மெர்சி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் ஜெமி ரென்ஸ்விக் எம்பிஏ படித்து முடித்தார். இவருக்கும் பிலிப்பைன்ஸ் நாடு மின்டோனா பகுதியை சேர்ந்த ஜிம்மி ஜமீலா – மெரிட்டா ஜமீலா மகள் லாலைனுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்பந்தத்துடன் நடைபெற்றது. நேற்று நாகர்கோவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

காதல் கதை குறித்து மணமகளிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, எனது தந்தை பிலிப்பைன்ஸில் ஒரு ஆலய நிர்வாகியாக இருக்கிறார். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஜெமி ரென்ஸ்விக்கின் தந்தை எங்கள் நாட்டிற்கு வந்தபோது, எனது தந்தையும் அவரது தந்தையும் நண்பர்கள் ஆயினர். கடந்த 2019-ஆம் ஆண்டு நான் எனது தாய் தந்தையுடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த போது எனக்கு ஜெமி ரென்ஸ்விக்குடன் அறிமுகம் ஏற்பட்டு இருவரும் செல்போனில் பேசி நட்பை வளர்த்தோம். பின்னர் கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் காதலித்தோம். இங்குள்ள மக்களின் அன்பான அரவணைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது என கூறியுள்ளார்.