உத்தரகாண்ட் மாநிலம் நைனித்தால் மாவட்டம் திகுலி கிராமத்தில் உள்ள கடையில் சிறுமி ஒருவருக்கு கட்டாயமாக தனது மொபைல் எண்ணை கொடுக்க முயன்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவரை கிராம மக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் நடந்த இந்த தைரியமான செயலைக் கண்ட கடையின் உரிமையாளர் மற்றும் கிராம தலைவர் ஜகதீஷ் சிம்வால் உடனடியாக விழிப்புணர்வுடன் செயல்பட்டு, சுற்றுலா பயணியை தடுத்து வைத்துள்ளனர்.
नैनीताल–
रामनगर क्षेत्र में UP के टूरिस्ट की पिटाई। आरोप है कि ये टूरिस्ट रिजॉर्ट के पास दुकान पर सामान लेने गया। वहां बैठी लड़कियों को अपना मोबाइल नंबर दिया। विरोध करने पर उन्हें रिवॉल्वर दिखाई। इस पर लोगों ने इस टूरिस्ट को पकड़ लिया। पिटाई करके पुलिस के हवाले कर दिया। pic.twitter.com/NQACKtKJpO— Sachin Gupta (@SachinGuptaUP) September 15, 2025
தகவல் அறிந்ததும் கிராம மக்கள் திரளாக திரண்டனர். அந்த பயணியை வலைவீசி பிடிக்க முயன்ற போது, அவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால், மக்கள் பதற்றமின்றி செயல்பட்டு அவரை பிடித்து தாக்கி போலீசிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ செப்டம்பர் 15-ஆம் தேதி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அது பெரும் கவனத்தை பெற்றது.
தற்போது குற்றவாளி காவல்துறையின் கண்காணிப்பில் உள்ளார். அவரிடம் துப்பாக்கி எங்கிருந்து வந்தது, ஏதேனும் அனுமதி இருந்ததா, சிறுமிக்கு தொல்லை கொடுத்தது உண்மையா உள்ளிட்ட விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
