கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூரை சேர்ந்த பெண் கமலா. இவர் சூலூர் மார்க்கெட் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கவன குறைவால் லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கமலா மார்க்கெட் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது சாலையோரம் சிமெண்ட் கலவை லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதன் அருகே கமலா கடந்து சென்றார்.
அப்போது ஓட்டுனர் லாரி அருகே பெண் ஒருவர் செல்வதை கவனிக்காமல் திடீரென லாரியை இயக்கினார். அதில் லாரியை கடக்க முயன்ற கமலா மீது லாரி ஏறியது.
அதில் முன் சக்கரத்தில் சிக்கிய கமலா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து உடனே காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் கமலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.
தற்போது சமூக வலைதளங்களில் கமலாவின் தலை மீது ஏறி இறங்கிய லாரியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
